தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி டீன் இடம் மனு அளித்தனர்;
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரிக்கை மனுவை திண்டுக்கல் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஆர் சுகந்தி ராஜகுமாரியிடம் பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ் ஆர் வீரமணி, அரசு டாக்டர்கள் நிர்வாகிகள் டாக்டர்கள் திருலோகசந்தர், நாகராஜ்,ரேகா,விஜயா உள்பட பலர் உள்ளனர். மேலும் இது குறித்து திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது அண்மையில், மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் இணைப்பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்களால் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ஒரு வருடத்திற்கும் குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள மருத்துவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையினால் அரசுக்கு எந்தவித தேவைகளும் பூர்த்தி செய்யப்பட போவதில்லை. மாறாக இதனால் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் முதலிய அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.