ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கான பட்டறிவு பயணம்

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உட்பட 50 நபர்கள் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் பட்டறிவு பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;

Update: 2025-08-11 12:33 GMT
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உட்பட 50 நபர்கள் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் பட்டறிவு பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை வளர்ச்சியடைய உதவும் வகையில் இந்த பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News