அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பெண்கள் தரையில் படுத்து சாலை மறியல் - போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்;

Update: 2025-08-11 13:16 GMT
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் சரவணகுமார் என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகள் ஆன வட மாநிலத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பெண்கள் சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

Similar News