நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் இரண்டு நாட்கள் விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 12) சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.