அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்;
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை குறித்து ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட மேற்கு மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.