அகத்தியர், லோபமுத்ரா திருமண வைபோகம்

குமாரபாளையத்தில் அகத்தியர், லோபமுத்ரா திருமண வைபோகம் நடந்தது.;

Update: 2025-08-12 12:15 GMT
குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியில் அகத்தியர், லோபமுத்ரா திருமண வைபோகம் பக்தர்களால் நடத்தப்பட்டது. முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா துவங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அகத்தியர், லோபமுத்ரா சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தனர். சிவாச்சாரியர்கள் திருமண வைபவத்தை முன்னின்று நடத்தினர். லோபமுத்ரா கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்க, பக்தர்கள் மலர்கள், மஞ்சள் அரிசி தூவி வாழ்த்தினர். உலக நன்மைக்காக நடந்த இந்த திருமண விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தாம்பூலப் பைகள் வழங்கப்பட்டன.

Similar News