கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி ஓட்டுனர், லாரியை விட்டு தப்பியோட்டம்

குமாரபாளையம் அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி ஓட்டுனர், லாரியை விட்டு தப்பியோடினார்.;

Update: 2025-08-12 12:21 GMT
குமாரபாளையம் அருகே கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகர் உள்ளிட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, சாணார்பாளையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஓட்டுனர், போலீசார் நிற்பது கண்டு,லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினார். போலீசார், லாரியை சோதனையிட்டதில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Similar News