நெல்லையை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் இளைய சகோதரர் டி.பி.எம். சாகுல் ஹமீது முஸ்தபா இன்று (ஆகஸ்ட் 12) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் சாகுல் ஹமீது முஸ்தபா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.