நெல்லை மாநகர பர்கிட்மாநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை ஒன்றியம் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பர்கிட்மாநகரம் விரிவாக்க பகுதிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் லிட்டர் அளவுள்ள குடிநீர் நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சி மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.