நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சுர்ஜித் சகோதரியிடம் சுமார் மூன்று மணி நேரம் இன்று (ஆகஸ்ட் 13) சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்பொழுது கவினுக்கும் சூர்ஜித்துக்கும் இடையேயான பழக்கம் எப்படி பகையாக மாறியது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.