காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் முன்னாள் முதலமைச்சர் பேச்சு
காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் இந்த திராவிட மாடால் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு;
திருப்பத்தூர் மாவட்டம் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் இந்த திராவிட மாடால் ஆட்சியில் அதிக வரி விதித்து ஒருநாட்டை அடிமைபடுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி பேட்டி. திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்ற சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள வருகை தந்த தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி.பழனிச்சாமி, திருப்பத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி.பழனிச்சாமி.. திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன் இன்று காலை சுமார் 32 அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய பிரச்சனை குறித்து என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பின்னர் அனைத்து நிறைவேற்றப்படும் மேலும் உட்கட்ணி விவகாரத்தை பகிரங்கமாக மேடையில் கூற முடியாது கட்சி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தேவையான நீர்களை வழங்கப்படும். தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடியது தான் திமுகவின் சாதனை, பள்ளிகளை மூடுவதற்கு முன்பாக அதை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டு வேண்டிய விஷயம் ஏற்கனவே இயங்கி வந்த அரசு பள்ளி மூடுவது சரியில்லை தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக ஆட்சியில் நிறைய அரசு பள்ளிகளை ஏற்படுத்தினோம் அப்பொழுதுதான் அறிவுபூர்வமான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற ஏழை எளிய மாணவர்கள் அந்தப் பகுதியில் கல்வி கற்க வேண்டும் என அதிகமாக திறக்கப்பட்டது இந்த ஆட்சியில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது இது வருத்தமும் வேதனையும், அளிக்கிறது இதற்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு சட்ட முழுங்கும் அடியோடு சீர்கெட்டு விட்டது. இன்றைக்கு தங்கம் வெள்ளி என்ன விலை நிலவரம் போல், தமிழகத்தில் கொலை நிலவரத்தை பட்டியலிட்டு சொல்கின்ற அளவிற்கு தமிழகம் இருக்கின்றது, இதற்கு காரணம் காவல்துறை சுதந்திரமாக செயல்பட இந்த அரசு அனுமதிக்கவில்லை, குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் காவல்துறை மீது கொஞ்சம் கூட அச்சம் இல்லாத காரணத்தினால் ரவுடிகளின் ராஜ்ஜியம் கொலை பட்டியல் நீண்டு கொண்டிருக்கின்றது, கொலை ,கொள்ளை திருட்டு, வழிப்பறி பாலியல் தொல்லைகளின் மூல காரணமே போதை பொருட்கள் தான் போதைப் பொருளுக்கு ஆளானவர்தான் இந்த செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர், தாயுமானர் திட்டம் நல்லதா? கெட்டதா? என்பதை எதிர்காலத்தில் பார்த்து தான் சொல்ல வேண்டும் எல்லா திட்டமும் தொடங்கி தான் வைக்கின்றார் அவர்கள் தொடங்கிய திட்டம் எது நல்லதாக இருக்கின்றது துங்கும்போது நன்றாகத்தான் உள்ளது ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் போது தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் இவர்கள் 50 திட்டம் அறிவித்து 50 குழு போட்டு உள்ளார்கள் 50 குழுவும் தற்போது கிடப்பில் உள்ளது, திட்டத்திற்கு அறிவிப்பு, விளம்பரம் கொடுப்பார்கள் திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைய வேண்டும் அப்பொழுது தான் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அர்த்தம் திட்டத்தை அறிவித்தால் வெற்றி பெறாது, அதை நடைமுறைப்படுத்தி நடைமுறையில் வெற்றி பெற்றால் தான் அது வெற்றிகரமான திட்டம் என மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். பல நாடுகளிலும் பல பொருள்கள் விளைய வைக்கப்படுகிறது வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட வரியில் இருந்து அதிக வரித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது, நகர கழிவுகளை தூய்மைப்படுத்தினால் தான் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் தூய்மை ஆகும், பாஜக கூட்டணியில் நாங்கள் உள்ளோம் அதனால் மற்ற கூட்டணியை நாங்கள் முடிவு செய்ய வேண்டும், அதிமுக தான் தலைமை தாங்குகிறது சந்தர்ப்ப சூழ்நிலை வரும்பொழுது அதற்கான பதில் நாங்கள் தருவோம், இது சுதந்திர நாடு ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த கட்சி அந்த கட்சிக்கு போகக்கூடாது என யாரும் தடுக்க முடியாது எல்லோரும் கட்சி மாறி மாறி தான் இருக்கிறார்கள் மைத்ராயன், அன்வர் ராஜா போன்றவர்கள் எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதை நாங்கள் பேசுவோம் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் காலங்கள் இருக்கின்றது 8 மாத காலத்தில் பல கட்சிகள் எங்கள் தலைமையை ஏற்று சேருவார்கள் எனப்பேட்டியளித்தார்.