வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்
திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்;
திண்டுக்கல் விவேகானந்தாநகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமானுஜம் என்பவர் வீட்டுக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.