வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

அம்பாத்துரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது;

Update: 2025-08-13 10:24 GMT
திண்டுக்கல், அருகே ஜாதிகவுண்டன்பட்டியை சேர்ந்த திருமுருகன் இவரது வீட்டின் பூட்டை கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர் உடைத்து உள்ளே நுழைந்து 3 பவுன் தங்க நகை திருடியது தொடர்பாக அம்பாத்துரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் மற்றும் காவலர்கள் அறிவியல் முறையில் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் காளிமுத்து(58) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 பவுன் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News