வாணியம்பாடி அருகே மின் மோட்டார் திருடிய இரண்டு வாலிபர் கைது

வாணியம்பாடி அருகே மின் மோட்டார் திருடிய இரண்டு வாலிபர் கைது;

Update: 2025-08-13 11:13 GMT
வாணியம்பாடி அருகே குடிநீர் பம்ப்ஹவுஸ் மின் மோட்டார் மற்றும் வயர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பேரூராட்சி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் பம்ப்ஹவுஸ் எக்லாஸ்புரம் பாலாற்று பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கிணற்றிலிருந்து அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவில் குடிநீர் பைப்புலைன் அமைத்து உதயேந்திரம் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றிலிருந்து புதிய பைப்புலைன் அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எக்லாஸ்புரம் பம்ப்ஹவுஸ் கிணற்றில் மின் மோட்டாருக்குச் செல்லும் ஒயர்கள், குடிநீர் பைப்புகள் ஆகியவை அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து, கடந்த 08.01.2025 அன்று உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் மர்ம நபர்களை தேடிவந்த நிலையில், வாணியம்பாடி சவுக்கு தோப்பு பகுதியை சேர்ந்த கே. விஷ்ணு, மற்றும் கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த எஸ். வினோத் ஆகிய இருவர் குடிநீர் கிணற்றில் இறங்கி மின் மோட்டார் மற்றும் ஒயர்களை திருடி செல்ல முயன்ற போது, பம்ப்ஹவுஸ் காவலாளிகள் கையும் களவுமாக பிடித்து அம்பலூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அம்பலூர் போலீஸார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News