வாணியம்பாடியில் உணவு விடுதியில் தீ விபத்து

வாணியம்பாடியில் உணவு விடுதியில் தீ விபத்து;

Update: 2025-08-13 11:16 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் டிஃபன் கடையில் கேஸ் சிலிண்டர் கசிவால் திடீரென ஏற்பட்ட தீ விபத்து. உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியை சேர்ந்தவர் அஃப்ரோஸ்(30) அஹமத், இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று இரவு கடையில் பரோட்டா செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்து பணியை செய்து கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு அடுப்பு வைத்துள்ள அந்த பகுதி முழுவதும் மளமளவென தீபற்றி எரிந்துள்ளது. கடையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து உடனடியாக கடையில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் கடையின் உரிமையாளர் அஃப்ரோஸ் மற்றும் கடையின் ஊழியர் அஸ்மத் ஆகியோர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை தண்ணீரை ஊற்றியும், ஈரமான கோணிப்பை பயன்படுத்தியும் சாதுரியமாக அனைத்து தீயை கட்டுப்படுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீப்பற்றி எரிகிறதா என்பதை கண்காணித்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News