ஐடி ஊழியர் கொலை வழக்கில் சுர்ஜித் சித்தி மகன் கைது
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு;
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலைக்கு உதவியாக இருந்த குற்றவாளி சுர்ஜித் சித்தி மகன் ஜெயபாலன் இன்று (ஆகஸ்ட் 13) சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.