பரமத்திவேலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
பரமத்திவேலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்கள் பங்கேற்பு;
பரமத்திவேலூர், ஆக. 13 பரமத்திவேலூர் பேரூ ராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வேலூர் செல்லாண்டியம் மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது முகாமிற்கு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். வேலூர் பேரூர் செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ்பிர பாகரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சி.எம்.கண்ணன், மாவட்ட இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர், நவலடி ராஜா,பூக்கடை சுந்தர்,வேலூர் பேரூர்கழக அவைத்தலைவர் மதியழகன்,பரமத்தி வேலூர் தாசில்தார் முத்துக்குமார், வேலூர்ராட்சி செயல் அலுவலர் (பொ) வேல்முருகன், துப்புரவு அலுவலர் செல்வகுமார், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் மனுக்களை பெற்று உடனுக்குடன் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தீர்வு கண்ட சான்றிதழ்களை மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் கே. எஸ். மூர்த்தி சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் ஒன்றிய,நகர,பேரூர்,கழக நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் என பலர்கலந்து கொண்டனர்.