அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2025-08-13 14:18 GMT
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. 1998ம் ஆண்டு படித்த மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று, பள்ளியில் படித்த காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தகவல்கள் பரிமாறிக்கொண்டனர். இந்த மாணாக்கர்களில் பலர் திருமணமாகி குழந்தைகளுடன் பங்கேற்றனர். பலர் அரசு பணிகளிலும், பலர் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருவது குறித்தும், தங்கள் பணி குறித்தும் பேசினார்கள். இந்த சந்திப்பின் நினைவாக பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கினர். பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்திட உறுதி கூறினார்கள்.

Similar News