சதுரங்க விளையாட்டு போட்டி
மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது, குறுவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற 48 பெண்கள் 48 ஆண்கள் என 96 பேர் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர், 11, 14, 17, 19 ஆகிய வயது பிரிவை உடையவர்க்கு சதுரங்க போட்டி;
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையில் சார்பில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன இதில் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது இதில், இன்று பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது, குறுவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற 48 பெண்கள் 48 ஆண்கள் என 96 பேர் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர், 11, 14, 17, 19 ஆகிய வயது பிரிவை உடையவர்க்கு சதுரங்க போட்டி நடைபெற்றது, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் தலைமையில், மரகதம் பள்ளியின் நிறுவனர் மரகதம், தாளாளர் நிருபா சரவணன், முதல்வர் சோபாராணி மற்றும், பெரம்பலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் அலெக்சாண்டர், மற்றும் அழகு துறை ஆகியோர் முன்னிலையில் போட்டி துவங்கப்பட்டு நடைபெற்றது இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள். ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினார்கள், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள், மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிக்கு தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.