திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை;
தக்கநமது நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு ஆய்வாளர் பொன்மணிசித்ரா மற்றும் காவலர்கள் ரயில்வே தண்டவாள பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர் மேலும் ரயில்நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனைகளுக்கு பின்பே உரியவர்களி டம் வழங்கப்பட்டது. ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி உள்ள ஆட்டோக்கள், இருசக்கரவாகனங்கள் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது ரயில்நிலையவளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றிவருகிறார்களா என ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.