நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் கேடிசி நகர் கிளை கூட்டம் நேற்று இரவு நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிடியூ மாவட்ட செயலாளர் பாளை அன்சாரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் எஸ்டிடியூ சார்பில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.