நெல்லையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கூலி திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு திரையரங்கில் ரஜினியின் உருவப்படம் வைத்து ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதன் காரணமாக நெல்லையில் உள்ள திரையரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.