திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஆஸாத் ரோட்டின் நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் படந்து காணப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளான காஜா, அசாருதீன், காதர் மீரான் ஆகியோர் ஜல்லி கற்களை அகற்றி சீர்படுத்தினர். இந்த பணியை மேற்கொண்ட எஸ்டிபிஐ கட்சியினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.