ஆந்திர சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆந்திர சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்;
திருப்பத்தூர் மாவட்டக் திம்மாபேட்டை ஊராட்சியில் வெளியூர் ஆட்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என தமிழக - ஆந்திர சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், வருவாய்த்துறையினர் வெளியூர் ஆட்களுக்கு பட்டா வழங்க நிலத்தை அளவீடு செய்துள்ளதாகவும் தங்களது ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இடுகாடு, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்களை தங்கள் ஊராட்சி மக்களுக்கு கட்டித் தராமல் வெளியூர் ஆட்களுக்கு கட்டித் அதிகாரிகள் பட்டா வழங்குவதாக கூறி திம்மாம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தமிழக - ஆந்திர சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு அதிகாரிகளிடம் இது கொடுத்து பேசிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் தமிழக - ஆந்திரா சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது