திருமணம் நிச்சயிக்கபட்டு, நிறுத்தப்பட்ட கல்லூரி மாணவி மாயம்
குமாரபாளையத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் நிறுத்தப்பட்ட கல்லூரி மாணவி மாயமானார்;
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுபத்ரா, 23. இவரது தந்தை ராஜவேல், 48, பழனி நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வருகிறார். சுபத்ராவுக்கும், பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சில காரணங்களால் நிறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுபத்ரா முனைவர் பட்டம் படிக்க, சான்றிதழ் சரி பார்க்க, ஆக. 8ல், இரவு 07:00 மணிக்கு, குமாரபாளையம் தனியார் கல்லூரியிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்றார். ஆக. 10ல் மகளை தொடர்பு கொண்டு ராஜவேல் கேட்ட போது, சுபத்ரா, தான் சென்னை சென்று, குமாரபாளையம் கல்லூரிக்கு திரும்ப வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இவரது பேச்சில் நெருடல் இருந்ததால், சென்னையில் உள்ள சுபத்ரா தோழி விமலா வசம் கேட்ட போது, சென்னை அண்ணா பல்கலைக்கழக கேண்டீன் வாசலில் சுபத்ரா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு வாக்குவாதம் நடந்த விபரம் தெரியவந்தது. குமாரபாளையம் கல்லூரியில், சுபத்ராவுடன் பணியாற்றும் காயத்ரி என்ற என்பரிடம் ராஜவேல் கேட்ட போது, அவர் வரவில்லை என்று கூறினார். இது குறித்து ராஜவேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்து,தன் மகள் சுபத்ராவை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.