நெல்லை அதிகாரிக்கு நல்லாளுமை விருது அறிவிப்பு
திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரசன்ன குமார்;
தமிழகத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்காக திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரசன்ன குமாருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து துணை ஆணையர் பிரசன்னகுமாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.