சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர்.