புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மூவண்ணம் கொண்ட பலூன்களையும் மற்றும் சமாதான புறாக்களையும் வானில் பறக்க விட்டனர். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.