ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம். விவசாயிகள் கவலை

குமாரபாளையம் அருகே ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் மூடியதால் விவசாயிகள் கவலை அச்சத்தில் உள்ளனர்;

Update: 2025-12-18 13:52 GMT
குமாரபாளையம் அருகே உள்ளது தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் கிராமம். இங்கு ஏராளமான விவசாயிகள் ஆடுகள் வளர்த்து வாழ்ந்து வருகின்றனர். சமீப நாட்களாக ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் மூடும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் வசம் சொல்லியதால், நேற்று வீரப்பம்பாளையம் பகுதியில் மூகாம் அமைத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஊசி போட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Similar News