புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு!!
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான வடக்கு ராஜ வீதியில் 1899-ம் ஆண்டு கட்டப்பட்டது நகர் மன்ற கட்டடம். புதுக்கோட்டையில் மிகமுக்கிய கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், அறிவுசார் நிகழ்வுகள் நடைபெறுகிற இக்கட்டிடத்தின் வளாகத்தில், புதுக்கோட்டை மாநகராட்சி சார்பில் மண்டல அலுவலகம் கட்டப்படுவதை எதிர்த்து இலக்கிய அமைப்புகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை நகர் மன்ற கட்டட வளாகத்தில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் விஐயபாஸ்கர் கழக நிர்வாகிகளோடு நேரில் சந்தித்து மனு அளித்தார். மேலும் 125 ஆண்டுகள் பழமையான வளாகத்தை எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பதோடு, மண்டல அலுவலகத்தை வேறொரு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு அளித்து கோரிக்கை வைத்தார் இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் எம்டிஆர் தமிழரசன்சேட் பாஸ்கர் அண்ணாதுரை ராஜ்குமார் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.