இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லாளுமை விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதில் விருது அறிவிக்கப்பட்ட நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரசன்ன குமார் இன்று (ஆகஸ்ட் 15) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நல்லாளுமை விருதினை பெற்றார். விருது பெற்ற துணை ஆணையர் பிரசன்னகுமாருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.