சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்*
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்*;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்* திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் வெண்புறாக்களையும் மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டனர். அதனைத் தொடர்ந்து காவலர் அணி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டனர். பின்னர் காவலர் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார் . சுதந்திரப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 155 பயனாளிகளுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் பங்கு பெற்றனர்.