வனத்துறை சார்பில் கடல்பசு பாதுகாப்பு கிராமிய விழிப்புணர்வுக் கூட்டம் 

வனத்துறை;

Update: 2025-08-15 15:40 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சின்னமனை  நடுநிலைப் பள்ளி, மனோரா கடற்கரை கிராமம் ஆகிய இரு இடங்களில், தமிழ்நாடு வனத்துறை தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ், கடல் பசு பாதுகாப்பு தொடர்பான கிராமிய விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட, வன அலுவலர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை கலைக்குழுவினர் கலந்து கொண்டு, கலைநிகழ்ச்சிகள் மூலம் கடல்பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடல்பசு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.  நிகழ்வுகளில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், கடற்கரை கிராம தலைவர்கள், பொதுமக்கள், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் ராக்கேஸ் பெர்நாத், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News