விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி
விமன் இந்தியா மூவ்மெண்ட்;
விமன் இந்தியா மூமெண்ட் சுத்தமல்லி நகரம் சார்பாக நகர தலைவர் ரியல் பீர் தலைமையில் சுதந்திரமும் பெண்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை தொகுதி செயலாளர் பயாஸ் கலந்து கொண்டார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரதி நகர் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.