சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது;
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அஞ்சலி ரவுண்டானா பகுதியில் அஞ்சலி ஹோட்டல் பின்புறம் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த காப்பிளியப்பட்டியை சேர்ந்த காந்தி மகன் சக்திவேல் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.