கரூர்-தேமுதிக சார்பில் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர்-தேமுதிக சார்பில் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-16 07:25 GMT
கரூர்-தேமுதிக சார்பில் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர்- ஈரோடு சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் அரவை. முத்து தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் சுதீஷ் ,தேர்தல் பணிக்குழு செயலாளர் அன்புராஜ்,கலை இலக்கிய அணி துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும்,இந்த தேர்தலில் நமது கட்சி பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் எனவும்,அதற்கு பூத் கமிட்டி முகவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . அதன் மூலம் விஜயகாந்த் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Similar News