திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவது குறித்து இளைஞர்களுக்கு பவானி வேல்முருகன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.