திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி சாலை காமராஜர் மண்டபம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த பத்து நாட்களாக தண்ணீர் வீணாக சாக்கடைக்கு செல்கின்றது. இதில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலையும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.