திருப்பத்தூரில் ரயில்வே தரை பாலத்தில் கழிவு நீர் மூழ்கி உள்ளத்தால் சரி செய்ய கோரி சாலை மறியல்

திருப்பத்தூரில் ரயில்வே தரை பாலத்தில் கழிவு நீர் மூழ்கி உள்ளத்தால் சரி செய்ய கோரி சாலை மறியல்;

Update: 2025-08-16 13:09 GMT
திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் அருகே ரயில்வே தரை பாலத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருந்து இந்த தரை பாலத்தின் வழியாக நாட்றம்பள்ளி செல்லும் பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறி தானியங்கள் திருப்பத்தூர் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் எடுத்து வரும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது தினந்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் தேங்கி இருக்கும் தரைபால கழிவு நீரில் செல்கின்றனர் சில நேரங்களில் விபத்து ஏற்படுவது உண்டு இதை குறித்து துணை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக அவ்வப்போது புதுப்பேட்டை ரோடு டிஎம்எஸ் பள்ளி அருகே உள்ள ரயில்வே தரை பாலத்தில் மழை நீரும் கழிவு நீரும் குளம் போல் தேங்கி வந்தது. இந்த கழிவு தேக்க நீரை வெளியேற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை சார்பாக பம்ப் ரூம் அமைத்து ஜெனரேட்டர் அமைத்தும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதால் வாகனங்கள் சென்று வருவதற்கு சிரமம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் தொடர்ந்து அரை மணி நேரமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சாலை முதலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News