பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம்: தலைவர் மகளுக்கு பாராட்டு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப்பதக்கம்‌ பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2025-08-16 13:09 GMT
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப்பதக்கம்‌ பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார். திமுக பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் மகள், பொன் இசக்கி அர்ச்சனா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 102 கல்லூரிகள் அளவில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பிரிவில் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம்‌ பெற்றதைத் தொடர்ந்து மேயர் ஜெகன பெரியசாமியை நேரில் சந்தித்து வாழத்து பெற்றார். அப்போது, கல்வியிலும் வாழ்விலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் வாழ்த்தினார்.

Similar News