துரத்தும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

குமாரபாளையத்தில் துரத்தும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்;

Update: 2025-08-16 13:44 GMT
குமாரபாளையம் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நிறைய நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் பொதுமக்களை, சிறுவர், சிறுமியர்களை துரத்தி வருகின்றன. இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். பலர் சில நாய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இவைகளை பிடிக்க சொல்லி நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் அந்தந்த ஊராட்சி அதிகாரிகள் வசம் புகார் கூறி வருகின்றனர். குப்பாண்டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் சாலை பழுதாகி பல்லாங்குழி போல் உள்ளது. இதில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வயதான நபர்கள் டூவீலரில் வரும் போது, இதில் தவறி விழுந்து காயமடைந்து வருகிறார்கள். பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்ததும் பலனில்லை. இதனால் அபப்குதி மக்கள் , சாலையை சீரமைக்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் வேண்டி போராட்டத்தில் ஈடுபட தயராகி வருகிறார்கள்.

Similar News