டூவீலர் மீது கார் மோதி ஒருவர் படுகாயம். கார் ஓட்டுனர் கைது

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி ஒருவர் படுகாயம். கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-08-16 13:53 GMT
திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 56. கட்டிட மேஸ்திரி. இவர் ஆக.8ல், சேலம் வேலைக்கு சென்று விட்டு, மாலை 05:40 மணியளவில் சொந்த ஊருக்கு டி.வி.எஸ். ஜூப்பிடர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ரெனால்ட் டிரைபர் கார், இவர் மீது மோத, நாகராஜ், பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் சேலம் கவுதமன், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News