பைக் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி:
பைக் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி: டிரைவர் கைது|;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் புவனேஷ் (20), இவர் இன்று மதியம் பசுவந்தனை நோக்கி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது புற்று முருகன் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மண்பாதையில் இருந்து பசுவந்தனை பிரதான சாலையில் ஏறி திருப்பும் போது அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த புவனேஷ் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தண்ணீர் லாரியை ஓட்டி வந்த வேப்பலோடை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஆனந்த முருகவேல் மகன் மாணிக்கராஜ் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.