டவுனில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள்;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 17) டவுன் சந்திப்பிள்ளையார் முக்கு கோவில் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதில் விடுதலை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.