சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
மாபெரும் இரத்ததான முகாம்;
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்கம் சாரா இளைஞரணி ஸ்பீடு இரத்ததான சேவைக்கழகம் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் மண்டபத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 17) மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. இதில் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.