பொத்தனுர் பேரூராட்சியில் வடிகால் வசதி இல்லாத பகுதியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.
பொத்தனுர் பேரூராட்சியில் 15 வது வார்டில் வடிகால் வசதி இல்லாத பகுதியை சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆய்வு செய்தார்.;
பரமத்தி வேலூர், ஆக.17: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் வடிகால் வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடந்த சில வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகரிடம் 15 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கால் வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் சேகர் பொத்தனூர் 15 ஆவது வார்டு பகுதியில் நேரில் ஆய்வு செய்து பகுதியில் வடிகால் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் என பகுதி மக்களுக்கு உறுதி அளித்து சென்றார்.