ராசிபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி முன்னாள் அமைச்சர் சரோஜா நேரில் சென்று ஆறுதல்..

ராசிபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி முன்னாள் அமைச்சர் சரோஜா நேரில் சென்று ஆறுதல்..;

Update: 2025-08-17 15:21 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் குடும்பத்தினர் அந்தியூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ராசிபுரம் திரும்பிக்கொண்டிருந்தததனர். இந்த காரை யுவராஜ் (29) என்பவர் ஒட்டிச்சென்றார். மேலும் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் அவர்களது காரில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், ராசிபுரம் அடுத்துள்ள தேங்கல்பாளையம் அருகே எதிர் எதிரே சென்று இரு கார்களும் நேருக்கு நேர் மோதியது. சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து வலது புறம் எதிரே வந்த காரில் மோதியதால் இந்த கார் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் கோனேரிப்பட்டி பகுதியில் வசிக்கும் சைக்கிள் கடை உரிமையாளர் விஸ்வநாதன் மனைவி மைதிலி (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இரு கார்களில் பயணித்த தினேஸ்குமார், கீர்த்தனா, அனிதா மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சேலம் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கார் விபத்தில் உயிரிழந்த மற்றும் விபத்தில் காயமடைந் தவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா. அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

Similar News