நெல்லை தாமிரபரணி நதிக்கரையோரம் சேந்திமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் முதல் ராஜகோபுரம் கொண்ட உச்சிஷ்டகணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா நேற்று தொடங்கியது. மாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக்பலி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.