திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுகவின் மேலப்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலையில் இன்று இராமச்சந்திரா கார்டன் நலச்சங்க நிர்வாகி அண்ணாமலை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 54வது வார்டு வட்ட கழக செயலாளர் சின்னத்துரை, தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.