கெளசிகா மகாநதியை தூர்வாரும் பணி சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கெளசிகா மகாநதியை தூர்வாரும் பணி சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;

Update: 2025-08-18 15:02 GMT
விருதுநகர் கெளசிகா மகாநதியை தூர்வாரும் பணி சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கெளசிகா மகா நதியில் விருதுநகர் நீர்வளத்துறை வைப்பாறு கோட்டம் மூலம் 20 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரும் பணி ஆகஸ்ட் 5 முதல் நடைபெற்று வருகிறது.இந்த தூர் வாரும் பணியின் போது ஏற்கனவே கெளசிகா மகாநதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கருவேல மரங்களை அகற்றும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.கருவேல மரங்களை அகற்றும் போது வேரோடு அகற்றாமல் மேலே உள்ள செடிகளை மட்டுமே வெட்டுவதால்ஈரப்பதத்தினால் கருவேல மரங்கள் மீண்டும் வளரும் அபாயம் உள்ளது. 1950 ம் ஆண்டு சர்வே படி ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கெளசிகா மகாநதியை தூர்வார வேண்டும் நதியின் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும் கெளசிகா மகாநதியில் கரை ஓரங்களில் இருபுறமும் சாய்வாக கற்களை பதிக்க வேண்டும். கரையின் இருபுறமும் கைபிடி சுவர்கள் கட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.கெளசிகா மகாநதியில் உள்ள கழிவு மண்ணை அகற்றி நதியின் ஆழத்தை அதிகப் படுத்த வேண்டும். சாக்கடை நீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.ஆனை குழாய் பகுதியில் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் குறுக்கே ஓடுவதால் அந்த பாலம் இருக்குமிடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து அதன் இருபுறமும் மக்கள் பாதுகாப்பிற்காக கைபிடி சுவர் கட்ட வேண்டும். கெளசிகா மகாநதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீர் குல்லூர் சந்தை அணைக்கு வந்து சேரும்போது அணை சுத்தமாக இருந்தால் அந்த பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள் இந்த பணிகள் நடைபெறுகிறதா என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நகர செயலாளர் கமல் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர், மாவட்ட நற்பணி அணி துணை அமைப்பாளர் நடராஜன், நகர ஐ.டி பிரிவு அமைப்பாளர் சங்கர் சசி, கர்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Similar News